--- --:--:-- --

புது கட்சி ஒன்றை தொடங்கப் போகிறாரா டிரம்ப்..!

17

திபர் பதவியில் இருந்து விலகும் டிரம்ப் குடியரசு கட்சியிலிருந்து விலக இருப்பதாகவும் புது கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டி வந்த டிரம்ப்பிற்கு ஆதரவாக கடந்த 6ஆம் தேதி நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்த டிரம்ப் ஆதரவாளர்களால் கலவரம் மூண்டது.

 

இதற்கு டிரம்ப்பின் சொந்தக் கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தங்களது செயல்பாடுகளுக்கு குடியரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவிக்காததால் அந்த கட்சியில் இருந்து டிரம்ப் விலக இருப்பதாகவும் தேசபக்தி கட்சி என்ற புதிய கட்சியை தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியும், ஜனநாயக் கட்சியும் மாறி மாறி வரும் சூழலில் புதிதாக ஒரு கட்சி தொடங்குவதும் அதனை முன்னிலைப்படுத்தும் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon