--- --:--:-- --

அதிமுகவின் மண்டல பொறுப்பாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை..!

4

திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருடன் சட்டப்பேரவை தேர்தல் பணி தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.

 

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நாளை காலை சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற உள்ளது.

 

பின்னர் பிற்பகல் 4.30 மணி அளவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் தேர்தலை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Right Menu Icon