--- --:--:-- --

மருத்துவர் இல்லாததால் ஊழியர்கள் ஊசி போட்டதால் நோயாளி மரணம்..!

6

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த அவர் இறந்த நிலையில் உடலை வாசலில் வைத்துவிட்டு மருத்துவமனை ஊழியர்கள் பூட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. புதுச்சேரி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் கிளினிக் ஒன்று இயங்கி வருகிறது.

 

55 வயதான கூலித் தொழிலாளி ஆறுமுகம் என்பவர் திடீர் மூச்சுத் திணறலால் மருத்துவம் பார்க்க வந்துள்ளார். அப்போது அங்கு மருத்துவர் இல்லாததால் மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவருக்கு போன் செய்து நோயாளி குறித்து தகவல் கூறி மருத்துவர் பரிந்துரையின் பேரில் ஊசி போட்டு உள்ளனர்.

 

ஊசி போட்டதும் மேலும் மூச்சடைத்து மயங்கி விழுந்து சிறிது நேரத்தில் கூலித்தொழிலாளி ஆறுமுகம் இறந்து போய் உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிறகு கிளினிக்கை மூடிய மருத்துவ ஊழியர்கள் இறந்தனர்.

 

உடலை வாசலில் போட்டுவிட்டு அங்கு சென்றுள்ளனர். அதனால் சுமார் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தனியார் கிளினிக் வாசலிலேயே உடல் இருந்துள்ளது. இதையடுத்து உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறு பரிசோதனை முடிவு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon