--- --:--:-- --

போதை விருந்தில் கலந்து கொண்ட நடிகை அதிரடி கைது..!

10

கேரளாவில் நடைபெற இருந்த போதை விருந்தில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகை உட்பட ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். அந்த மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரெசார்ட்டில் மது விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து போலீசார் இரவில் தனியார் ரெசாட்டில் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த போதை பவுடர் உட்பட ஏழு வகையான போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

 

போதை விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக தொடுபுழாவை சேர்ந்த அஜ்மல் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் நடிகை பிரிஸ்டியும் ஒருவர். இவ்வாறு சில மலையாளப் படங்களில் நடித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon