--- --:--:-- --

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாநில அரசு அனுமதி..!

8

புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் புதுச்சேரிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டம் ஆண்டுதோறும் கலைகட்டும். ஆனால் இந்த ஆண்டு கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகக் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

எனினும் புதுச்சேரியில் அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் விடுதிகளில் 200 பேர் வரை அனுமதிக்கலாம் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

 

விடுதிகளில் 200 பேர் வரை அனுமதிக்கலாம் எனவும் முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். எனினும் அனைவரும் முகக் கவசம் அணிவதோடு ஒரு சமூக இடைவெளியை கடைபிடித்து பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon