கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஜோ பைடன்..!
அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளார். டெலாவர் நகரிலுள்ள மருத்துவமனையில் அவருக்கு பைசர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பேசிய அவர் நாட்டு மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள டிரம்ப் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 கோடி பேருக்கு ஊசி போடப்பட உள்ள நிலையில் இதுவரை சுமார் 6 லட்சம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமெரிக்காவில் பைசரை தொடர்ந்து மாடனா தடுப்பூசியும் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த ஊசி முதன்முதலாக செவிலி ஒருவருக்கு போடப்பட்டுள்ளது.







