ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு மாணவிகளின் இறப்பிற்கு நீதி வேண்டும்..!
செங்கல்பட்டு மாவட்டம் ஆமை பாக்கத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பள்ளி மாணவிகள் இறப்பிற்கு நீதி வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தைகளை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கவேண்டும் என்றும் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். ஆமை பாக்கத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 2 பள்ளி மாணவிகளின் உடல்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது.






