--- --:--:-- --

மேட்டுப்பாளையம் : பெள்ளாதி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ராதிகா கிணற்றில் குதித்து தற்கொலை.போலீசார் விசாரணை !!!

14

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் ராதிகா ( வயது 33 ).இவருக்கும் கோவையை சேர்ந்த சித்துக்குமார் ( வயது 39 ).பிரிண்டிங் அச்சகத்தில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

 

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ராதிகாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்துக்குமாரின் அண்ணன் வீட்டில் நடந்த விசேஷ நிகழ்ச்சிக்கு தனது மனைவியுடன் சித்துக்குமார் வந்துள்ளார்.

 

அப்போது,திடீரென ராதிகாவிற்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து தனது கழுத்து,காதுகளில் போட்டிருந்த நகைகளை கழற்றி கொடுத்து விட்டு அருகில் சென்று விட்டு வருவதாக கூறிச்சென்றுள்ளார்.நேரம் ஆகவே வீட்டில் உள்ள அனைவரும் ராதிகாவை கடந்த 4 நாட்களாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் உள்ள காண்டீபன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்து கிணற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தோட்ட உரிமையாளர் காரமடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

விரைந்து வந்த மேட்டுப்பாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் காரமடை காவல் துறையினர் கிணற்றில் இறங்கி சடலத்தை மீட்டனர்.இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது ராதிகா என்பது தெரிய வந்தது.

 

சடலத்தை மீட்ட தீயணைப்புத்துறையினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon