சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றும் 2 லட்சம் பேருக்கும் 2,500 ரூபாய் வழங்கப்படும்..!
சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற விண்ணப்பித்ததற்கு மேலும் இரண்டு லட்சம் பேருக்கு 2,500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 298 ஆக உள்ளது.
இந்த அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றி கொள்ள கடந்த ஐந்தாம் தேதி முதல்அரிசி அட்டைகளாக மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து 2 லட்சம் பேர் சர்க்கரை குடும்ப அட்டைகளை மாற்றம் செய்ய இணையவெளியில் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது இந்த மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரிசி அட்டைகளாக மாற்றப்பட்ட உடன் புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.






