--- --:--:-- --

சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

2

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 320 லிருந்து 406 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொது முடக்க தளர்வுகளுக்கு பிறகு வொர்க் மேன் ஸ்பெஷல் என்ற பெயரில் சிறப்பு புறநகர் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

 

முதற்கட்டமாக 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120 ஆக அதிகரிக்கப்பட்டது. அதன் பிறகு கூடுதலாக 30 சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு 150 ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. பெண்கள், குழந்தைகள், மின்சார ரயில்களில் பயணிக்கலாம் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து சென்னையில் மின்சார ரயில்களின் சேவை எண்ணிக்கை 320 ஆக உயர்ந்தது.

 

இந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 86 ரயில் சேவை அதிகரிக்கப்படுகிறது. இதனால் சென்னையில் இன்று முதல் 406 ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Right Menu Icon