அமெரிக்காவில் 2-வது தடுப்பூசி விநியோக பணி தொடக்கம்..!
அமெரிக்காவில் மாடனா தடுப்பூசியை பயன்படுத்த அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து அவை கிடங்குகளில் இருந்து அவற்றை உரிய மையங்களுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லும் பணிகள் தொடர்கிறது. பிரபல சரக்கு போக்குவரத்து நிறுவனங்களை இதற்காக அரசு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மிசிசிபி மாகாணத்தில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து அமெரிக்காவின் 3 ஆயிரத்து 700 நகரங்களுக்கு தடுப்பூசி கொண்டு செல்லப்பட உள்ளது. பைசர் நிறுவனத்தில் தடுப்பூசி போடும் பணியில் அமெரிக்காவில் கடந்த வாரமே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரொனா இரண்டாவது அலை கடுமையாக வீசி வரும் நிலையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.






