--- --:--:-- --

சபரிமலையில் இன்று முதல் நாள்தோறும் 5000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை கேரள தேவஸம்போர்டு தனது ஆன்லைன் சேவையை ” அப்டேட் ” செய்யவில்லை.ஐயப்ப பக்தர்கள் அவதி !!!

14

கேரள மாநிலம் சபரிமலைக்கு இன்று முதல் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது.

 

கொரோனா காரணமாக வார நாட்களில் தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் பக்தர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 

இதனை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், சபரிமலையில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வரும் இன்று முதல் தினமும் 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு தெரிவித்துள்ளார்.

 

மேலும்,ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக ஆன்லைன் மூலம் புக்கிங் செய்த பிறகே பக்தர்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் இதுவரை கேரள தேவஸம் போர்டு இதுவரை தனது ஆன்லைன் சேவையை ” அப்டேட் ” செய்யவில்லை.கேரள உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை.வரும் ஜனவரி 19 ஆம் தேதி வரை புக்கிங் உள்ளது போல் தொடர்ந்து ஆன்லைனில் வருகிறது.இதனால் கார்த்திகை முதல் துளசி மணி மாலையணிந்து கடுமையான விரதம் மேற்கொண்டு எப்படியும் ஐயப்பனை தரிசித்து விடலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் ஐயப்ப பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

மேலும்,கேரள தேவஸம் போர்டு தனது ஆன்லைன் சேவையை அடிக்கடி அப்டேட் செய்து வந்தால் ஐயப்ப பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருப்பார்கள்.எனவே,கேரள அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என தமிழக,கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில ஐயப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon