--- --:--:-- --

தமிழகத்தில் இன்று முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி..!

1

தமிழகத்தில் இன்று முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. உங் அரங்கங்களில் கூட்டங்கள் நடத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி இன்று முதல் அரசியல், மதம், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு கூட்டங்களை திறந்தவெளியில் நடத்திக்கொள்ளலாம். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவீதத்துக்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வகையில் கூட்டங்களை நடத்தலாம்.

 

இந்தக் கூட்டங்களுக்கு சென்னையில் காவல்துறை ஆணையரிடமும் பிற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon