புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது..!
கர்நாடக அரசு கொரொனா பரவலைத் தடுக்க பொது இடங்களில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. கர்நாடகாவில் கிளப்புகள், பப்புகள், உணவகங்கள், விடுதிகளில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிசம்பர் 30 முதல் 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் அவற்றின் வழக்கமான செயல்பாடுகளுக்கு தடை இல்லை தேவாலயங்களில் சமூக விலகலின்றி அதிகம் பேர் கூடாமல் பார்த்துக் கொள்ளும் படியும் அறிவுறுத்தியுள்ளது.






