ஜப்பான் ட்விட்டர் கில்லருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை..!
சீரியல் கில்லர் என்ற பெயரில் ஜப்பானை உலுக்கிய சீரியல் கொலைகாரனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்வதாக டுவிட்டரில் கருத்து பதிவிடுபவர்களை தேர்ந்தெடுத்து தானும் அவர்களுடன் சேர்ந்து மடிய தயார் எனக்கூறி நட்பாக்கிக் கொள்வது, 30 வயது இளைஞனான தக்கா கிரோவின் வழக்கம்.
இப்படி 15 முதல் 26 வயதுடைய 8 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை நட்பாகி கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி டிஸ்போஸ் செய்து வந்துள்ளார்.
தற்கொலை எண்ணத்தை வெளிப்படுத்தியவர்களை கொலை செய்ததால் அவனுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது என அவரது வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதி அவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.






