--- --:--:-- --

கோவை : புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் என்ஜினியர் சந்திரசேகர் முன்னிலையில் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்த பிரபு,சதீஸ்,தியாகராஜன் தலைமையில் இணைந்த இளைஞரணி நிர்வாகிகள் !!!

9

கோவை வடவள்ளி பகுதியில் திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரபு,திமுக மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சதீஸ்,இளைஞரணி நிர்வாகி தியாகராஜன் உள்ளிட்டோர் தலைமையில் கோவை வடவள்ளி போல் நிலையம் அருகே ஊர்வலமாக வந்த 250 க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் என்ஜினியர் சந்திரசேகர் முன்னிலையில் இன்று திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.

 

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு திமுகவில் தற்போது வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாகவும்,அதிலும் உதயநிதி ஸ்டாலின் வருகைக்கு பின்னர் வட்ட,ஒன்றிய,மாவட்ட செயலாளர்களின் வாரிசுகளுக்கே பதவிகளை வழங்கி வருவதாகவும்,திமுகவில் மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை இதுதான் தற்போது நடைபெற்று வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

 

காலம் காலமாக திமுகவில் வேலை செய்து வந்த தங்களுக்கு மதிப்பளிப்பதில்லை. ஆனால்,அதிமுகவில்மக்கள் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாகவும்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முறையில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாகவும்,அதிமுகவில் மட்டுமே அடிமட்ட தொண்டனும் பதவியை பெற இயலும்.

 

அதனால் தான் தாங்கள் திமுகவில் இருந்து அதிமுகவில் இணைந்துள்ளதாகவும்,அதில் தங்களுக்கு பெருமையாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon