--- --:--:-- --

பலூன்களை பயன்படுத்தி கின்னஸ் சாதனை படைத்த நிறுவனம்..!

8

மெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் பலூன் நிறுவனம் ஒன்று 7,236 பலூன்களை பயன்படுத்தி அழகான நீண்ட வாக்கியம் ஒன்று அமைத்து கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

 

மியாமி நகரில் தனது கிளையை துவக்கிய அந்த நிறுவனம் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து இந்த சாதனையில் ஈடுபட்டது. வண்ண வண்ண பலூன்கள் மூலம் சக்சஸ் ஹஸ் நதிங் டு டூ வித் லக் இட் இஸ் அ மேட்டர் ஆப் கன்சிஸ்டன்ஸி என்ற அழகான ஆழமான ஆங்கில சொற்களை உருவாக்கியது.

 

இந்த வாக்கியத்திற்கு தமிழில் வெற்றிக்கும், அதிர்ஷ்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு நிலைத்த தன்மையின் விஷயமாகும் என்பது பொருளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon