--- --:--:-- --

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்!

0.2

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மதுசுதன் ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 16 பேர் கலந்து கொண்டு தங்களது வாக்குகளை செலுத்தினர்.

 

இதில் அதிமுக சார்பில் பொன்மணி பாஸ்கரன் திமுக சார்பில் நாகனி செந்தில்குமார் போட்டியிட்டனர். பின்னர் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக-திமுக இருவரும் தலா 8 வாக்குகள் பெற்று சம நிலை பெற்றதால் குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது.

அதிமுக சார்பில் போட்டியிட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன்மணி பாஸ்கர், தமிழக அரசு உதவியுடன் சிவகங்கை மாவட்டத்தை, தமிழகத்தில் மிகச்சிறந்த மாவட்டமாக வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.

 

Leave a Reply

Right Menu Icon