கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்ட கிரண்..! வைரலாகும் புகைப்படம்..!
கட்டுமஸ்தான உடல் என்றால் நம் நினைவுக்கு வருவது கட்டதுரை ரியாஸ்கான் தான். ஆனால் ஆண்கள் மட்டுமே கட்டுமஸ்தான உடலமைப்பு கொண்டிருக்க வேண்டும் என்பதை உடைத்தெறிந்து உள்ளார் தெலுங்கானாவை சேர்ந்த உடற்பயிற்சியாளர்.
இவரின் புகைப்படங்கள் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு வயது 45 தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பூர்வீகமாகக் கொண்டவர். பிரபல நடிகைகளான தமன்னா, அனுஷ்கா ஷெட்டி போன்றோருக்கு இவர் பயிற்சியாளராகவும் உள்ளார். அதற்கான பயிற்சி கூடத்தையும் வைத்துள்ளார்.
சிக்ஸ் பேக் வைத்திருக்கும் தெலுங்கு திரை உலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் தனது உடலை வைத்துள்ளார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் இவரின் பயிற்சியாளராக உள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஹங்கேரி நாட்டில் நடந்த உலக உடல் கட்டமைப்பை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.






