அதிமுக உயர்நிலை கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெறுகிறது..!
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதிமுக உயர்நிலைக் கூட்டம் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் 20-ஆம் தேதி நடைபெற்றது.
இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட ஆலோசனை வரும் 14ம் தேதி மாலை 4.30 மணி அளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களுடன் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் அமித்ஷா முன்னிலையில் பாஜக உடனான கூட்டணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும் என ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர்.
இதே கூட்டத்தில் பேசிய அமைச்சர் அரசின் நடவடிக்கைகளை பாராட்டையும், திமுகவை விமர்சித்தும் பேசினாலும் கூட்டணி குறித்து வாய்திறக்கவில்லை. பாஜகவின் மாநில தலைவர் வேல்முருகன் கூட்டணி குறித்து மத்திய தலைமை தான் முடிவு செய்யும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்த பின்னணியில் நடிகர் ரஜினிகாந்தும் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவருடன் கூட்டணி அமைக்க பாஜக முனைப்பு காட்டுவதாக கூறப்படும் நிலையில் சீர்திருத்தங்கள், நிலைப்பாடு என்ன என்பது அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.






