ஒரு சிறுநீரகம் மட்டுமே கொண்டுள்ள தடகள வீராங்கனையின் சாதனை..!
தடகளப் போட்டிகளில் தான் அதிக வெற்றி பெற்ற நேரத்திலும் தனக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே இருந்ததாக பிரபல தடகள வீராங்கனை அஞ்சு தெரிவித்துள்ளார். பாரிசில் 2003 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கம் வென்ற அஞ்சு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ஒற்றை சிறுநீரகத்தால் உச்சத்தை அடைந்த சிலரில் தானும் ஒருவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
வலி நிவாரணி மருந்துகள் ஒவ்வாமை, மந்தமான கால்கள் போன்ற சிக்கல்கள் இருந்தாலும் தன்னால் சாதிக்க முடிந்ததாக குறிப்பிட்டுள்ள அவர் அதற்கு தனது பயிற்சியாளரின் மந்திரமா அல்லது திறமையா என்று பதிவிட்டுள்ளார்.






