--- --:--:-- --

புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று முதல் ஆய்வு செய்கின்றனர்..!

2

மிழகத்தில் புயல் பாதிப்புகளை மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று முதல் ஆய்வு செய்ய உள்ளனர். மத்திய உள்துறை இணை செயலாளர் அசுதோஸ் அக்னிஹோத்ரி தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் நேற்று தமிழகம் வந்தனர்.

 

இந்த குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, தலைமை செயலாளர் சண்முகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதைதொடர்ந்து மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று முதல் இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

இதில் ஒரு குழுவினர் தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆய்வு நடத்த உள்ளனர். பின்னர் ஏழாம் தேதி புதுச்சேரி செல்லும் மத்திய குழுவினர் அங்கு ஆய்வை முடித்து விட்டு கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

மற்றொரு குழுவினர் இன்று காலை வட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் ஆய்வு செய்து பின்னர் வேலூர் செல்கின்றனர். நாளை வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆய்வு செய்து விட்டு சென்னை திரும்புகின்றனர். இதனை தொடர்ந்து எட்டாம் தேதி காலை அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை மேற்கொள் கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon