--- --:--:-- --

அமெரிக்காவில் டிக் டாக்கை விற்க உடன்பாடு எட்டவில்லை..!

10

மெரிக்காவில் டிக்டாக் நிறுவனத்தின் வணிக செயல்பாடுகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பதற்கான காலக்கெடு முடிந்தும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக கூறி சீனாவின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்க அரசு தடை விதித்தது.

 

இந்த தடையை நீதிமன்றம் அகற்றியதை அடுத்து டிக்டாக்கின் அமெரிக்க பிரிவை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க டிசம்பர் 4ஆம் தேதிக்குள் உடன்பாடு எட்ட வேண்டும் என அரசு தெரிவித்தது.

 

இது தொடர்பாக சீனாவின் பைடான்ஸ் மற்றும் அமெரிக்க அரசு இடையே எந்த உடன்பாடும் இதுவரை ஏற்படவில்லை. இந்நிலையில் காலக்கெடு முடிந்த பின்னரும் அரசும் பைடான்சும் பேச்சுக்களை தொடரும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon