ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட தேவாலயம் புயலால் இடிந்து சேதம்..!
புரவி புயல் மழையால் தனுஷ்கோடியில் நூற்றாண்டு சிறப்புமிக்க தேவாலயத்தின் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
ஆங்கிலேயர்களால் 1914இல் பவளப்பாறைகள் மற்றும் சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்ட இந்த தேவாலயம் 1964 இல் தனுஷ்கோடியை தாக்கிய புயலில் சிறிய அளவில் சேதம் அடைந்தது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வந்த நிலையில் புயல் மழையால் தேவாலயத்தில் மேற்கு பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதனால் புயலால் சிதலமடைந்த கட்டிடங்களை பழமை மாறாமல் பாதுகாக்க 3 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களை நடைமுறைப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.






