--- --:--:-- --

விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை..!

4

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர்.

 

புதிய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணும் வகையில் டெல்லியில் 35 விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாவிட்டாலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. அதன்படி இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.

 

இந்த நிலையில் விவசாயிகள் எழுப்பும் கோரிக்கைகளை எப்படி அணுகுவது, சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகளைத் எப்படி களைவது என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் ஆகியோர் ஒன்று கூடி விவாதித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon