--- --:--:-- --

ஜப்பானில் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி அறிவிப்பு..!

3

ஜப்பான் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரொனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

 

மற்ற நாடுகளை போல அல்லாமல் ஜப்பானில் கொரொனாவால் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 2,100 என்ற அளவிலேயே உள்ளது. இருப்பினும் நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவச கொரொனா தடுப்பூசி வழங்கப்படும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியிருந்தார்.

 

அதன்படி மொத்த மக்கள் தொகையான 12 கோடியே 65 லட்சம் பேருக்கும் இலவசமாக கொரொனா தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவர்களில் 6 கோடி பேருக்கு அமெரிக்காவின் பைசர் நிறுவனத்திடமிருந்து தடுப்பூசிகளும் அந்நாட்டின் மற்றொரு நிறுவனமான மாடனாவிடமிருந்து இரண்டரை கோடி தடுப்பு மருந்துகளும் வாங்கப்பட இருக்கின்றன.

 

ஆஷ்ட்ரா ஜெனகாவிடம் இருந்து சுமார் 12 கோடி தடுப்பூசிகள் பெறப்படும் என்பதையும் ஜப்பான் அரசு உறுதி செய்துள்ளது. இதற்கு ஜப்பான் தொகையில் 671. 4 மில்லியன் செலவு பிடிக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய தொகையில் சுமார் 47 ஆயிரத்து 332 கோடி ரூபாயாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon