ஓசியில் உணவகம் தர மறுத்த உரிமையாளரை அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள்..!
பழனியில் ஓசியில் பிரியாணி தர மறுத்த ஹோட்டல் உரிமையாளரை தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அடித்து உதைத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் போலீஸ்காரர் ஆன கார்த்திகேயன், பழனி சண்முகாநதி அருகே ஆதிக்ஷா நல் விருந்து என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இங்கு சில தினங்களாக ஓசி பிரியாணி கேட்டு தொல்லை கொடுத்து வந்த தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் உறுப்பினர் சபரி என்பவர் தனது ஆதரவாளர்களுடன் புதன்கிழமை மாலை உணவக உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேலும் அந்த கும்பல் கல்லாவில் இருந்து 58 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி சென்று உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பழனி காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






