புரெவி புயலில் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
புரெவி புயலில் முன்னெச்சரிக்கையாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் முன்பாக காரைக்கால், புதுச்சேரியில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செயல்படும் நிலையில் தற்போது காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புரெவிப் புயல் காரணமாக நேற்று முன்தினம் முதல் காரைக்காலில் கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையால் நேற்று காலை முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது.
விடியற்காலை அதி தீவிர கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது புதுச்சேரி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்.






