டிசம்பர் மாத தளர்வுகள் குறித்து வருகிற 28-ஆம் தேதி ஆலோசனை..!
டிசம்பர் மாத தளர்வுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மருத்துவ நிபுணர் குழுவிடம் வருகிற 28-ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.
நவம்பர் 30ஆம் தேதியுடன் இந்த மாதத்திற்கான ஊரடங்கு உத்தரவு என்பது முடிவுக்கு வர உள்ள நிலையில் கொரொனா சூழல் காரணமாக செய்து மேலும் டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் 28ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படும் பொழுது மருத்துவ நிபுணர் குழுவினர் மாவட்ட ஆட்சியர் கருத்துகளை கேட்டறிந்த பிறகு தமிழக அரசு தன்னுடைய முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறது.
அதன் அடிப்படையில் இந்த மாதம் 28ஆம் தேதி முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலமாக மருத்துவ நிபுணர்கள் உடன் தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பிறகு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.







