பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி நடிகர் விஜய் சேதுபதி வீடியோ வெளியிட்டுள்ளார்..!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி குற்றமற்ற பேரறிவாளனை விரைவாக விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வலியுறுத்தியுள்ளார் .
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் காலை முதல் ரிலீஸ் பேரறிவாளன் ஹேஸ்டேக்கில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் பேரறிவாளனை விடுவிக்கக்கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.






