மன்மோஹன் சிங்கை புகழ்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா..!
இந்திய பிரதமராக இருந்த காலத்தில் மன்மோகன்சிங் நேர்மையானவராகவும் தொலைநோக்கு சிந்தனை உள்ளவராகவும் அப்பழுக்கற்ற சுத்தமான தலைவராகவும் இருந்தார் என அமெரிக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா பாராட்டியுள்ளார்.
எ பிராமிஸ் டீலாண்ட் என்ற தமது சுயசரிதையில் இதை குறிப்பிட்டுள்ள அவர் மன்மோகன்சிங் ஒரு அபூர்வமான அறிவாளியும் நாகரீகமான மனிதரும் ஆவார் என புகழாரம் சூட்டியுள்ளார்.
அதேநேரம் காலம் காலமாக அமெரிக்க உறவு குறித்து இந்திய அதிகாரிகளிடம் நிலவும் ஐயங்களுக்கு உட்பட்டு எச்சரிக்கையுடன் அவர் அமெரிக்க உறவை கடைப்பிடித்தார் என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.







