அமித் ஷாவின் சுயவிவரப் புகைப்படத்தை நீக்கிய ட்விட்டர்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சுயவிவரப் புகைப்படத்தை ட்விட்டர் நீக்கியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவரப் படத்தை ட்விட்டர் இணையம் நீக்கி இருந்ததால் அது தெரியாமல் இருந்தது.
புகைப்படப் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் அந்த படம் நீக்கப்பட்டதாக ட்விட்டர்தெரிவித்திருந்தது. உரிய பதிலை தொடர்ந்து மீண்டும் அமித்ஷாவின் சுயவிவரப் படத்தை ட்விட்டர் மேல் பதிவேற்றம் செய்தது.







