--- --:--:-- --

பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்..!

3.1

வேல் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.

 

பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வரின் இல்லத்திற்கு முருகன், பாஜக துணைத் தலைவர்கள் நரேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முருகன் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க முதல்வரை நேரில் பார்த்ததாக தெரிவித்தார்.

 

அதைதொடர்ந்து துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சந்தித்த பாஜகவினர் வாழ்த்து தெரிவித்தனர். சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Right Menu Icon