--- --:--:-- --

மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனையை தொடங்கிய கோவிஷீல்டு..!

1.1

கோவிஷீல்டு தடுப்பு மருந்து மூன்றாவது கட்ட மருத்துவ பரிசோதனைக்கான தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவு பெற்று இருப்பதாக சீரம் இன்ஸ்ட்டிட்யூட் தெரிவித்துள்ளது.

 

கொரொனாவுக்கான மருந்துகளை தயாரிக்கும் பணியில் உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைத்து சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற தடுப்பு மருந்தை ஆய்வு செய்து வருகிறது.

 

ஏற்கனவே இரு கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட பரிசோதனைக்கு அந்த நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த பரிசோதனைக்காக கடந்த மாதம் இறுதிவரை 1600 தன்னார்வலர்களை சேர்க்கும் பணி நிறைவடைந்து இருப்பதாக கூறுகிறது.

 

இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளில் கோவிஷீல்டு தான் மனித பரிசோதனையில் முன்னணியில் உள்ளது. முழு பரிசோதனைகளும் நிறைவடைந்த பிறகு கோவிஷீல்டு தடுப்பு மருந்தை விரைவாக சந்தைக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon