--- --:--:-- --

9 மாதங்களாக பாசமாக வளர்த்து வந்த கரடி குட்டியை பிரிய மறுத்த சிறுவன்..!

4

ருணாச்சல பிரதேசத்தில் 9 மாதங்களாக பாசமாக வளர்த்து வந்த கரடி குட்டியை பிரிய மனமின்றி சிறுவன் ஒருவன் கைகொடுத்து கண்ணீருடன் வனத்துறையோடு வழியனுப்பி வைத்த நிகழ்வு நடந்துள்ளது.

 

ஆலோவை சேர்ந்த பழங்குடியின சிறுவனான டார்டே யோச்சே ஒன்பது மாதங்களுக்கு முன்பே சட்டவிரோதமாக வனவிலங்கு வர்த்தகர்களிடம் இருந்து பெண் கரடி குட்டி ஒன்றை மீட்டுள்ளார். அதற்கு லுப்பா என பெயரிட்ட அவன் தனது உதவி தொகை மற்றும் பெற்றோர் கை செலவுக்கு கொடுத்த பணத்தை செலவழித்து பராமரித்து வந்துள்ளார்.

 

அந்த பகுதி மக்கள் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருந்த கரடி தற்போது இடாநகர் மிருகக்காட்சிசாலையில் விடுவதற்காக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

Leave a Reply

Right Menu Icon