--- --:--:-- --

ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் இன்று தீர்ப்பு..!

5

பிசி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த கோரி தமிழக அரசு மற்றும் அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.

 

கடந்த முறை இந்த வழக்கு விசாரணை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நடைபெற்றபோது 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே கட்டாயம் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

 

அதேபோல இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு வாய்ப்பில்லை என்றால் தமிழக மாணவர்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்திப்பார்கள் என திமுகவும் வாதாடியது. அப்போது 50 சதவீத இட ஒதுக்கீட்டை தற்போது வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.

 

இந்நிலையில் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

Leave a Reply

Right Menu Icon