சீன வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப்..!
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன வங்கியில் கணக்கு வைத்துள்ளதாகவும் அந்நாட்டில் வணிக திட்டங்களை தொடர பணம் செலவழித்து உள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த செய்தியில் டிரம்ப் இண்டர்நேஷனல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் என்ற கணக்கில் சீனாவில் கணக்கு உள்ளதாகவும் அதற்காக ஏராளமான வரியை செலுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்கள் குறித்து டிரம்ப் விமர்சித்ததோடு இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போரை தூண்டினார். தற்போது அவருக்கே சீன வங்கியில் கணக்கு இருப்பது தெரியவந்துள்ளது.






