--- --:--:-- --

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா..!

1

ருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பார் என நம்புவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

திருச்சி, பெரம்பலூர், தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

 

அமைச்சர்கள் செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக யாரும் போராட தேவையில்லை என்று கூறினார்.

Leave a Reply

Right Menu Icon