--- --:--:-- --

முக்கியச் சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதியினரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்..!

5.2

இராமநாதபுரம் பாரதி நகரில் கிளினிக் நடத்தி வரும் Dr.வள்ளி பிரியா (19.10.2020) இரவு தனது கிளினிக்கை முடித்து வீட்டுக்கு கிளம்பும் போது, தனது மகள் பிரீத்தா வைஷ்ணவியின் பள்ளி சான்றிதழ், வெளிநாட்டு கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களை தவற விட்டுள்ளார்.

 

இதுதொடர்பாக கேணிக்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

 

இந்நிலையில் கீழக்கரையைச் சேர்ந்த பாஸ்கரன்-வாசுகி தம்பதியர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது கீழே கிடந்த சான்றிதழ்களை எடுத்து கேணிக்கரை காவல் நிலைய ஆய்வாளர் பிரபு-விடம் ஒப்படைத்தார்கள்.

 

இது தொடர்பாக தகவலறிந்த Dr. வள்ளி பிரியா தனது மகளுடன் இராமநாதபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தவறவிட்ட சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு பாஸ்கரன்-வாசுகி தம்பதியருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

 

முக்கியச் சான்றிதழ்களை நல்ல முறையில் உரியவரிடம் ஒப்படைத்த வாசுகி மற்றும் அவரது கணவர் பாஸ்கரனை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.கார்த்திக் உத்தரவின்பேரில் இராமநாதபுரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை பொன்னாடை அணிவித்து கௌரவித்து பரிசளித்து பாராட்டினார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon