மின்வேலியில் சிக்கி இறந்து சட்டவிரோதமாக புதைக்கப்பட்ட யானையின் உடல்..!
நீலகிரி மாவட்டம் உதகை அருகே மின்வேலியில் சிக்கி இறந்து புதைக்கப்பட்ட யானையின் உடலை வனத்துறையினர் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். சின்னகன்னுரை சேர்ந்த விக்னேஸ்வரன் தனது தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி 20 வயது காட்டு யானை உயிரிழந்துள்ளது.
இதையடுத்து விக்னேஸ்வரன் மேலும் 20 பேருடன் சேர்ந்து யானையை புதைத்ததாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் வனத்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.






