--- --:--:-- --

தேங்காய் நார் மில்லில் வேலை செய்துகொண்டே நீட் தேர்வு எழுதி சாதனை படைத்த மாணவர்..!

4

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தேங்காய் நார் மில்லில் வேலை செய்துகொண்டே நீட் தேர்வு எழுதி 635 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து இருக்கிறார் ஏழை மாணவர். முத்துநாயக்கன்பட்டி கிராம் மரத்து கொட்டைப் பகுதியை சேர்ந்த சுஜித்குமார் என்ற மாணவர் 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 377 மதிப்பெண்கள் பெற்றார்.

 

குடும்ப வறுமையால் தேங்காய் நார் மற்றும் செங்கல் சூளையில் வேலைக்கு சென்ற சுஜித்குமார் தான் சம்பாதிக்கும் பணத்தை கொண்டு தனியார் மையத்தில் சேர்ந்து நீட்தேர்வுக்கு தயாராகியுள்ளார்.

 

படிப்பு நேரம் போக வேலை, படிப்பு என்று மாணவர் சுஜித்குமார் தினமும் 20 மணி நேரம் கண்விழித்து தன்னம்பிக்கையுடன் நீட் தேர்வை எதிர் கொண்ட மாணவர் சுஜித் குமார் தற்போது வெளியான நீட் தேர்வின் முடிவில் 635 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

இதனால் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் குடும்ப வறுமை காரணமாக கல்லூரிக்கு செலுத்தவேண்டிய பணத்தை கட்ட முடியாத நிலையில் உள்ளார்.

 

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமை காரணமாக ஏழ்மையான குடும்பம் என்பதால் வாய்ப்பு கிடைத்தும் அவரால் படிக்க முடியாத நிலை உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon