நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்கும் பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா..!
நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியா உடன் நாசா ஒப்பந்தமிட்டுள்ளது.
2028 க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க பல நிறுவனங்களுடன் இந்திய மதிப்பில் 2,714 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளது.
அந்தவகையில் நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்பு கொள்வதற்கும், ஹெச்டி தரத்திலான படங்களை அனுப்பவும் நிலவின் மேற்பரப்பில் ஃபோர் ஜி நெட்வொர்க் அமைக்க நோக்கியாவுக்கு இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாயை நாசா வழங்கியுள்ளது.






