ஜம்மு காஷ்மீரை சீனாவின் பகுதி என்று சித்தரித்த ட்விட்டர்..!
ஜம்மு காஷ்மீரை சீனாவின் பகுதி என்று தவறாக சித்தரித்ததால் சமூக இணையதளமான ட்விட்டர் நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. பத்திரிகையாளரும் பாதுகாப்பு விமர்சகருமான நிதின் கோகலே லடாக் தலைநகர் லேவில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இருந்தே ட்விட்டரில் நேரடி ஒளிபரப்பு ஒன்றை நடத்தினார்.
அப்போது அந்த இடத்தை சீனா ஜம்மு காஷ்மீர் என்று சித்தரிக்கும் வகையில் எழுதிக் காண்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிதின் கோகலேவும், டிவிட்டரின் பயனாளர்கள் தவறை திருத்திக்கொள்ள மாறு கேட்டுக் கொண்டாலும் ட்விட்டர் தரப்பிலிருந்து அந்த தவறை திருத்திக் கொள்ளப்படவில்லை.






