சூரிக்கு கொலை மிரட்டல்..! கெட் அவுட் எனக்கூறிய விஷ்ணு விஷாலின் தந்தை..!
நிலம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு நடிகர் சூரிக்கு தயாரிப்பாளர் அன்பு வேல் ராஜன் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் ஓய்வு பெற்ற டிஜிபியும், நடிகை விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜா மீது நடிகர் சூரி புகார் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ரமேஷ் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். நடிகர் சூரியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து விஷ்ணுவிஷால் உண்மையில் நடிகர் சூரி தான் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்க்கு அட்வான்ஸ் பணத்தை திரும்ப தர வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தரவேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் கெட் அவுட் எனக்கூறி சூரியை மிரட்டிய தாகவும் தொலைபேசியில் பணத்தை கேட்டபோது காசு வேணுமா நீ வாழனுமா என மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.







