தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியது!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 67 பேர் உயிரிழந்த மொத்த உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த இரு மாதங்களாக குறைந்தபாடில்லை. ஒரே சீரான வேகத்தில் பாதிப்பும் உயிரிழப்பும் தினசரி பதிவாகி வருகிறது. தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 5447பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 35 ஆயிரத்து 855 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று 5524 பேர் வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்றைய இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் 67 பேர் ஆவர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9984 ஆக உயர்ந்து 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் 1369 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
அடுத்தபடியாக கோவையில் 473, செங்கல்பட்டு 227, சேலம் 322, திருவள்ளுரில் 252, தஞ்சையில் 242 என மாவட்டங்களில் இன்றும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.






