--- --:--:-- --

குட்கா விவகாரம் : சென்னை உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக சட்டப்பேரவை செயலாளர் மேல் முறையீடு!!

1.2

ட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீதான உரிமை மீறல் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை செயலாளர், உரிமைக் குழு தலைவர் சார்பில் இந்த மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழக சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்து காண்பித்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக 18 எம்எல்ஏக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், குட்காவை கொண்டு வந்ததில் உரிமை மீறல் இல்லை என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

 

இதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் ஒரு வாமை மீறல் நோட்டீசை சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பியது.

 

இந்த நோட்டீசை எதிர்த்தும், தடை கோரியும் திமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. கடந்த வாரம் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த உயர் நீதிமன்றம், உரிமைக் குழு நோட்டீசுக்கு இடைக்கால தடையும் விதித்தது. மேலும் சட்டப்பேரவை செயலாளர், உரிமைக் குழு தலைவர் ஆகியோர் விளக்கமளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீசுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என சட்டப்பேரவை செயலாளர் மற்றும் உரிமைக்குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து
அந்த மேல்முறையீட்டு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.

Leave a Reply

Right Menu Icon