மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ வெளியிட்ட மாணவர்கள்..!
கிருஷ்ணகிரி அருகே மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மாணவர்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பதினோராம் வகுப்பு மாணவர்கள் 2 பேரும் சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை அதே ஊரை சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவன் நதிக்கரையோரம் அழைத்து சென்றுள்ளார். அங்கே தனது நண்பர்கள் இருவரை வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
வீடியோவை இருவரும் 9 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு அனுப்ப அந்த மாணவனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் மூவரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






