--- --:--:-- --

அதிமுக செயற்குழுவில் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்..! முதல்வர் வேட்பாளர் குறித்து “கப்சிப்”!!

14

திமுக செயற்குழுவில் அதிமுக அரசின் 11 திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்தும் , நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் மத்திய அரசை வலியுறுத்தியும் என மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

 

சட்டசபை பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு இன்று கூடி நடைபெற்று வருகிறது. முதல்வர் வேட்பாளர் யார்? என்பதில் இபிஎஸ், ஓபி எஸ் இடையே பனிப்போர் நடக்கும் சூழலில், இந்த செயற்குழு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. செயற் குழுவில் இரு தரப்பும் தங்கள் பலத்தை நிரூபிக்க பலப்பரிட்சை நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. செயற்குழு கூடும் முன் கட்சி தலைமை அலுவலகம் முன் அரங்கேறிய காட்சிகள் இதை நிரூபிப்பது போல் அமைந்தன.

 

ஓபிஎஸ் படம் போட்ட மாஸ்க் அணிந்த அவரது ஆதரவாmர்கள், 3 முறை முதல்வர், அம்மாவின் ஆசி பெற்றவர் என முழக்கங்களை எழுப்பினர். பதிலுக்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் நிரந்தர முதல்வர், சாமான்யர்களின் முதல்வர் என பதாகைகளை ஏந்தி கோஷமிட்டதில் அப்பகுதி பரபரப்பாக வே காணப்பட்டது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் வருகையின் போதும், இரு பிரிவாக பிரிந்து அதிமுக தொண்டர்கள் விண்ணதிர கோஷம் எழுப்பியது, அதிமுகவில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருப்பதை நிரூபித்தது.

 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

இப்படி பரபரப்பான காட்சிகளுடன் செயற்குழு கூடியவுடன், முதலில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கொரோனா சிறப்பாக கையாண்ட முதல்வர், துணை முதல்வருக்கு பாராட்டு உள்ளிட்ட அதிமுக அரசின் திட்டங்களை பாராட்டும் வகையில் 11 தீர்மாஙை்களும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி நிலுவையை வழங்க வேண்டும் என்பது போன்ற 4 தீர்மானங்களை மத்திய அரசை வலியுறுத்தியும் நிறைவேற்றப்பட்டன.

 

இந்த செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் கு றித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்றெல்லாம் தகவல்கள் வெளியான நிலையில், அது பற்றி எந்த தீர்மானமும் இல்லை. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஓபிஎஸ் ஆதரவு தரப்பு சம்மதிக்காததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.மேலும் தொடர்ந்து செயற்குழுவில் காரசார விவாதங்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon