--- --:--:-- --

கிருஷ்ணகிரியில் கணவனை இழந்த பெண் எரித்து கொலை..!

13

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கணவனை இழந்த பெண் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நாட்ராம்பாளையத்தை சேர்ந்த மணிமேகலை என்பவர் ஏத்தகிணறு  கிராமத்தில் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

 

கோவிந்தசாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண் மஞ்சள் தூளை வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தசாமியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon