--- --:--:-- --

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகம் : 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

fg

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.

 

உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவிலும் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து 2-வது இடத்திலும், . உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்து 3-வது இடத்திலும் இந்தியா உள்ளது. தற்போது உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு சற்று கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் இந்தியா தான் டாப் இடத்தில் உள்ளது.

 

இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், சில மாநிலங்களில் கட்டுப்படாமல் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்தே வருகிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு , டில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவிலான கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்புகளில் இந்த 7 மாநிலங்களில் மட்டும் 63 சதவிகிதத்தை தாண்டியும், உயிரிழப் போ 75 % அதிகமாகவும் பதிவாகியுள்ளது.

 

இந்நிலையில் இந்த 7 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் சுகாதார அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில், கொரோனா தடுப்பு பணிகளில் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon